கடந்த சில வாரங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனி நிலவுவதால் வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூடுபனி காரணமாக ரயில், விமான சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீர் மற்றும் கிளஸ்டர் பல்கலைக்கழகங்களில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பின்னர் வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என காஷ்மீர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீPநகரில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தாமதமாக செல்கின்றன.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More