Mnadu News

ஸ்லீப் அப்னியா நோய்க்கு சிபேப் கருவியைப் பயன்படுத்தும் ஜோ பைடன்: உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக ‘ஸ்லீப் அப்னியா’ எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெளியான பல்வேறு ஊகங்களை களையும் வண்ணம் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் ‘ஸ்லீப் அப்னியா’வுக்காக சிபேப் கருவி பயன்படுத்துகிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

Share this post with your friends