கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் புதிதாகக் கட்டப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹவாய் செருப்பு அதாவது ரப்பர் காலணி அணிந்திருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும். அது நடப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே சமயம், வருங்காலத்தில் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது ஏர் இந்தியா நிறுவனம் பற்றி எதிர்மறையான செய்திகள்தான் வெளியாகும். அந்த ஆட்சியின்போது பல முறைகேடுகள் நடந்தன என்றும் கூறினார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More