Mnadu News

ஹாலிவுட் நடிகர் ட்ரீட் வில்லியம்ஸ் சாலை விபத்தில் உயிரிழப்பு: ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல்.

கடந்த 1975-ஆம் ஆண்டு வெளியான ‘டெட்லி ஹீரோ’ ஹாலிவுட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ட்ரீட் வில்லியம்ஸ். ‘தி ரிட்ஸ்’, ‘தி ஈகிள் ஹேஸ் லேண்டட்’ படங்கள் அவருக்கு அறிமுகத்தை கொடுத்த நிலையில், ‘ஹேர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘12 மைக்டி ஆர்ஃபன்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், அமெரிக்காவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 75 வயதான ட்ரீட் வில்லியம்ஸ் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends