வருடா வருடம் ஹாலோவீன் நாள் எனப்படுவது கிறிஸ்தவ புனிதர்களை நினைவுகூறும் வகையில் அமெரிக்காவில் கொண்டப்படுவது வழக்கம். அப்படி, இந்த வருடமும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது இந்த கொண்டாட்டங்கள்.
இதில், நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில்
அங்கிருந்த கூட்டத்தினர் அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் அங்கு வருவதற்குள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.