இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனை என்று அழைக்கப்படும் எச்.டி.எஃப்.சி வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிறுவனத்தை கையகப்படுத்த ஒப்புக்கொண்டது.இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கியுடன் வீட்டுவசதி நிதி நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைப்பு வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று எச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். .இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது. எச்.டி.எஃப்.சி வங்கி 100 சதவீதம் பொது பங்குதாரர்களுக்கு சொந்தமானதாக இருக்கும், எச்.டி.எஃப்.சியின் தற்போதைய பங்குதாரர்கள் வங்கியின் 41 சதவீதத்தை வைத்திருப்பார்கள்.ஒவ்வொரு எச்.டி.எஃப்.சி பங்குதாரரும் அவர்கள் வைத்திருக்கும் 25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகளை பெறுவர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More