கோமாளி படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்தது.
ஆனால், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் உதறி விட்டு தரமான படத்தை கொடுக்க வேண்டும் அதிலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக பக்கா ஸ்கிரீன் பிளே அமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். அது தான் கடந்த இருபது நாட்களாக இந்தியாவையே கலக்கி வரும் “லவ் டுடே”.
இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, ரவீனா என அனைவரின் நடிப்பும் பேசப்பட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து திரை அரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். வெறும் ₹10 கோடிகளில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை ₹70 கோடிகளை அள்ளி உள்ளது.
இது போக தெலுங்கில் டப்பிங் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. லவ் டுடே தெலுங்கு பாடல்களும் ஒவ்வொன்றாய் வெளியாகி வருகின்றன.
தமிழில் இன்னும் சில நாட்கள் ஓடினால் இப்படம் நிச்சயம் ₹100 கோடி வசூலை ஈட்டும் என்பது திண்ணம்.