Mnadu News

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு ஜூலை 11 வரை நீட்டிப்பு.

பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் பெறுகின்றனர். இந்தக் காலக்கடத்தைப் பயன்படுத்தி, பணியாளர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் பத்தி 11இன் 3 மற்றும் 11இன் 4 ஆகியவற்றின் கீழ் கூட்டு விருப்பத்தினை சமர்ப்பிக்கலாம். அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

Share this post with your friends