Mnadu News

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ-சுகாதார வசதிகள்:மன்சுக் மாண்டவியா அறிவிப்பு.

இமயமலை தொடரில் காஷ்மீரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர். கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1ஆம் தேதி; துவங்கி, ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது.இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு, இதுவரை ஏற்பாடு செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளிடம் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். பின்னர், இது தொடர்பாக, பேசிய மன்சுக் மாண்டவியா,அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். பக்தர்களுக்கு மருத்துவ, சுகாதார உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்.100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.

Share this post with your friends