Mnadu News

‘அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்’: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்.

உக்ரைனுக்கு எதிராக ரஷிய நாட்டிற்கான தனியார் ராணுவ படை போரிட்டு வந்தது. இந்நிலையில் ரஷிய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரஷியாவிற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சிக்கு பிரிகோசின் அழைப்பு விடுத்திருக்கிறார்.இந்த சூழலில்,; இந்த விவகாரம் குறித்து உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷியாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷியாவிற்கு ஏற்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends