Mnadu News

இந்தியாவில் அறிமுகமாகிய சிட்ரோன் மின்னணு கார்.

சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது புதிய இ-சி3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வாரம் முதல் புதிய ஐ-சி3 கார் டெலிவரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.25 நகரங்களில், நாடு முழுவதும் உள்ள 29 லா மைசன் சிட்ரோன் ஷோரூம்களிலும் இந்த கார் இனி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிட்ரோன் கார் 100 சதவிகித ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சிட்ரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.சிட்ரோன் இ-சி 3 கார் ஆனது 29.2 கிலோவாட் பேட்டரி பேக் உடன் நிரந்தர காந்த மின் மோட்டாரைப் பெறுகிறது. இந்த மோட்டாரானது அதிகபட்சமாக 56 பிஎச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 0-60 கிமீ வேகத்தை 6.8 விநாடிகளில் எட்டிவிடும். இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் சான்றிதழ் பெற்றதுடன் 320 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில் 100 சதவீதம் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 15 ஆம்பியர் ஹோம் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய சி3 ஆல் எலக்ட்ரிக் கார், மை சிட்ரோயின் கனெக்ட் மற்றும் சி-பட்டி ஆகிய இணைப்பு செயலிகளையும் பெறுகிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் கிடைக்கும் மை சிட்ரோன் கனெக்ட் செயலி மூலம் டிரைவிங் நடத்தை பகுத்தாய்வு, வாகன கண்காணிப்பு, அவசர சேவைகள் அழைப்பு, வாகன விபத்து அறிவிப்பு, பயன்பாட்டு அடிப்படையிலான காப்பீட்டு உள்ளிட்ட 35 அம்சங்களை வழங்குகிறது.

Share this post with your friends