Mnadu News

கர்நாடகா புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள்: துறைகள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியீடு.

கர்நாடகாவில் காங்கிரஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் அமைச்சர்; சித்தராமையாவுக்கு நிதித்துறையும், கேபினட் விவாகாரத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறை, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும், தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மதுபங்காரப்பாவுக்கு பள்ளிக்கல்வித்துறையும், எச்.கே.பாட்டீலுக்கு சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More