ஏழு முறை சம்மனை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது காணொலி வாயிலாக ஆஜராக இருப்பதாக தெரிவித்துளளார்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 8-வது முறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் காணொலி வாயிலாக ஆஜராக தயார் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.