ஏப்ரல்-1ம் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இதில் பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.