நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், 2-வது நாளாக இன்று பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்துள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த மோடி, கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார்.
விழா மேடை வரை திறந்த வாகனம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்த பாஜகவினர் மோடியை பார்த்ததும் உற்சாகம் அடைந்து மோடி..மோடி என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பிரதமர் மோடி, பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.