Mnadu News

தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது.

மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைதாகும் சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends