இன்றைய சட்டபேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.
அதில், ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றும் கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.