Mnadu News

தீபாவளிக்கு பொதுவிடுமுறைக்கு அமெரிக்கா நாடாளுமன்றத்தில்; மசோதா கொண்டு வந்த எம்.பி.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகத்தின் பல நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பண்டிகையை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் இணைந்து, இனிப்புகள் பரிமாறியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், அமெரிக்காவில் கிரேஸ்ட் மெங் என்ற எம்.பி., தீபாவளிக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றம்; பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த மசோதா நாடாளுமன்றத்தில், நிறைவேறி,அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்து போடும் போது சட்டமாகும்.

Share this post with your friends