Mnadu News

நயன்தாரா-விக்னேஷ்சிவன் வாடகைத்தாய் ஒழுங்கு சட்டதை மிரவில்லையா?

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை ஒழுங்குபடுத்துவதற்காக பல விதிமுறைகளை உள்ளடக்கிய வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவை மத்திய அரசு 2019இல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற்படும் முறைகேடுகளை 2021 குளிர்கால கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து 2022இல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்சில சலுகையை வழங்கியிருக்கிறது. அதாவது இந்த சட்டம் அமலாகும் காலத்திலிருந்து 10 மாதங்களுக்கு gestation period என்ற விதிவிலக்கு தந்திருக்கிறார்கள். இந்த சட்டம் வருவதற்கு முன்போ, அந்த நேரத்திலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்திருந்தவர்கள் எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் குழந்தையைப் பெற்று வளர்ப்பதற்கான சலுகைக் காலம் இது. அதனால்  அக்டோபர் 25 வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களை இந்த சட்டம் கட்டுப்படுத்தாது. எனவே, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இந்த சட்டத்தை மீறவில்லை என்று தெரிகிறது.

இச்சட்டத்தில், திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை தேவைப்படும் தம்பதியரில் பெண்ணுக்கு 23 – 50 வயதுக்குள்ளும் ஆணுக்கு 26 – 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு குழந்தை இருக்கக் கூடாது. உயிரியல் ரீதியாகவோ, தத்தெடுக்கப்பட்டதோ அல்லது வாடகைத் தாய் மூலமாகவோ எந்த ஒருவகையிலும் குழந்தை இருக்கக் கூடாது. குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். ஏற்கனவே குழந்தை பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.

இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைத் தாயாக இருப்பவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே, வாடகைத் தாய் முறையில் அவர் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர், 25-35 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சொத்து அனைத்திலும் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு. வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை, தம்பதிகள் கைவிடக் கூடாது.

வாடகை தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணுக்கு ஆதரவாக 3 ஆண்டுகளுக்கு பொது மருத்துவ காப்பீட்டை பெற வேண்டும். பணம் கொடுத்து குழந்தை பெற்றுத்தர சொல்வது சட்டப்படி குன்றமே.

சிகிச்சை சுழற்சியின் போது மகப்பேறு மருத்துவர் ஒரு கருவை மட்டுமே வாடகை தாயின் கருப்பையில் மாற்ற வேண்டும். சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே, 3 கருக்கள் வரை மாற்றப்படலாம் என்று விதிகள் கூறுகின்றன.

Share this post with your friends