அட்லீயின் உதவி இயக்குனராக கலை வாழ்வை துவக்கி அதன் பின்னர் SK வை வைத்து “டான்” என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தமிழ் சினிமா வில் அதிரடி அறிமுகம் கொடுத்தார் சிபி சக்கரவர்த்தி. டாக்டர் படத்துக்கு பின்னர் பிரியங்கா அருள் மோகன் SK வுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் 100 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. குறிப்பாக, இந்த படத்தில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா இவர்கள் இருவரின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இவர்களுடன் சூரி, பாலசரவணன், குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து படத்தை வெற்றிப் படமாக்கினார்.
முதன் முதலில் இந்த படத்தின் கதை உதயநிதிக்கு கூறவே இந்த ஸ்கரிப்ட்டை அவர் நிராகரித்து உள்ளார். ஆனால், சிவா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து சிபியை கவனிக்க வைத்தது. அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டி, தனக்கு ஒரு கதை தயார் செய்ய கூறி இருந்தார். ஆனால், அவர் கூறிய கதை ரஜினிக்கு அந்த அளவுக்கு கனெக்ட் ஆகாததால், அவரை டிராப் செய்து விட்டார்.
தற்போது பல மாத உழைப்புக்கு பின் நேச்சுரல் ஸ்டார் நானியிடம் ஒரு கதையை கூறி உள்ளாராரம். இது ஓகே ஆனால் இதை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் என தெரிகிறது. இது நிகழ்ந்தால் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி படாமக இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்த படம் ஓகே ஆனால் சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு ஒரு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.