Mnadu News

நியூ யார்க்கில் அபாய நிலையில் காற்றுமாசு: மூச்சு விட சிரமப்படும் மக்கள்.

கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உருவாகியுள்ள புகை மண்டலத்தால் நியூ யார்க்கின் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது. இதனால், உலகளவில், காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் புது டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி நியூ யார்க் நகரம் முன்னிலையைப் பிடித்துள்ளது. இதனால்,நியூ யார்க்கில் வசிப்பவர்களுக்கு இதய மற்றும் மூச்சு விடுவதில் பிரச்னை இருந்தால், வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் நியூ யார்க் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Share this post with your friends