Mnadu News

நேரலை செய்ய கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 2015-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை எனவும், அவைக்குறிப்புகளை உடனுக்குடன் இணையத்தில் வெளியிடுவதாகவும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More