நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாளை தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி நாளை மாலை சென்னையில் ரோட் ஷோவில் பங்கேற்று, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.