Mnadu News

மக்களின் முகத்தில் மகிழ்ச்சி அதுவே எனக்கு உற்சாக மருந்து; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அயலகத் தமிழர் தின விழாவின் 2-ம் நாளான இன்று ‘எனது கிராமம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எனக்கு உடல்நலம் சரியில்லை என சிலர் கூறும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழர்களும், தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பதே எனக்கு போதும். மக்களின் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு உற்சாக மருந்து என தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அயலகத் தமிழர் நலத்துறையை திமுக அரசு உருவாக்கியது. அயலகத் தமிழர் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை வளப்படுத்த நடந்தது முதலீட்டாளர் மாநாடு; உலகமே வளம் பெற நடப்பது அயலகத் தமிழர் மாநாடு. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.

நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள்; எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்; கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்; தமிழோடு இணைந்திருங்கள்; நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Share this post with your friends