உடல் சுத்தம் தான் நாம் ஆரோக்கியமாக உயிர் வாழ ஒரே சிறந்த வழி என்பார்கள். ஆம், குடலை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்வதன் மூலம் நம் ஆயுள் நீடித்து உடல் ஃப்ரெஷ் ஆக இருக்கும் என மருத்துவ துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பெருங்குடல் & மலக்குடல் பகுதிகளில் ஏற்படுகின்ற புற்றுநோயை மலக்குடல் புற்றுநோய் என்று குறிப்பிடுகின்றனர். இதில் பாதிக்கப்படும் நோயாளிகளில் 60 சதவீதம் பேர் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழுகின்றனர் என்று தரவுகள் கூறுகின்றன. 50 வயதுக்கு உட்பட்டோருக்கு மலக்குடல் புற்றுநோய் அதிக அளவில் பரவ என்ன காரணம் என ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், நம்முடைய நகங்கள் மற்றும் சருமத்தில் தொற்றுகளை ஏற்படுத்தும் அதே பூஞ்சைகளின் காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்று அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் டிஎன்ஏவை பரிசோதனை செய்தார்கள். குறிப்பாக, 45 முதல் 65 வயது வரையிலான நோயாளிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு காரணமாகவே இந்த நோய் ஏற்பட்டதாக நிறைய பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால், புற்றுநோய் மருத்துவர் ஜார்ஜ்டவுன் கூறுகையில், ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கும் நபர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர் என கூறுகிறார்.
மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுதல், மலம் கழிப்பதில் மாற்றம், இந்த புற்றுநோய்க்கான பிரதான அறிகுறிகள் ஆகும். அதேபோல வயிற்று வலி, உடல் சோர்வு, இடை இழத்தல், வாந்தி மயக்கம் போன்ற சிம்ப்டம்ஸ் அடங்கும்.
இதை தவிர ஜங்க் உணவுகள், பழைய இறைச்சிகளை உட்கொள்வது போன்றவை மலக்குடல் புற்றுநோய் உண்டாக காரணங்களாக அமைகின்றன.