மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு மாநிலத்தில் ஆங்காங்கே பெய்கின்ற மழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும், சில மாவட்டப் பகுதிகளில் பெய்த அதி கன மழையால் விளைநிலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 13ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.