Mnadu News

மாதவிடாய் வலியை குறைக்கும் 5 ஜூஸ் வகைகள்

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இடுப்பு, வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் வலிகள் தொடங்கிவிடும். மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்று வலியும் தசைப்பிடிப்பும் உண்டாகும். மாதவிடாய் காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியத்துடன் இருப்பது மிக அவசியம். ஆனால் நிறைய பெண்கள் இந்த காலகட்டங்களில் சரியாக உணவு எடுத்துக் கொள்ளுவதில்லை. மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இயற்கையான பழசாறு மூலம் எப்படி வலியை குறைப்பது என்று பார்க்கலாம்.

1. கற்றாழைதேன் ஜூஸ்

அதிக குளிர்ச்சியை அழிக்கும் கற்றாழையில் வலி நிவாரணத்திற்கான பண்புகள் நிறைய இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியைக் குறைக்கச் உதவும். கற்றாழையை சாப்பிடுவதை காட்டிலும் கற்றாழை சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு சீரான அளவில் இருக்கும். அது சீராக இல்லாத போது தான் வயிறு வலி அதிகமாக இருக்கும்.இதை சாப்பிடுவதன் மூலம் அதை சீராக இருக்க செய்ய முடியும்.

2. பப்பாளி ஜூஸ்

குறிப்பிட்ட காலம் இல்லாமல் வருடம் முழுவதும் கிடைக்கும் பலமே பப்பாளி. வைட்டமின் ஏ நிறைந்துள்ள 100கிராம் பப்பாளி பழத்தில் 3.5 கிராம் பைபர் (Fiber) என்னும் என்சைம் அதிகமாக இருக்கிறது. இந்த என்சைம் மாதவிடாய் காலகட்டத்தில் ஏற்படும் அதிகப்படியான வலியைக் குறைத்து பெரிய நிவாரணத்தைக் கொடுக்கும். மாதவிடாய் தள்ளி போகும் காலத்திலும் பப்பாளியை அரைத்து ஜூஸ் ஆகவோ அல்லது தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் சேர்த்து பொறியலாகவோ இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம்.  பப்பாளியில் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக இருக்கின்றன.

3. இஞ்சிமின்ட் ஜூஸ்

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் (Anti-oxidents) மற்றும் ஆன்டி – இன்பிளமேட்டரி (Anti-inflammatory) பண்புகள் அதிகம் உள்ளதால் வலி நிவாரணப் பண்புகள் அதிகம். இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியையும் இயற்கையாகவே குறைக்கச் செய்யும். சிறிது அளவு இஞ்சி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து ஜூஸாக்கி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு அடிவயிற்றில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலிகள் குறையும்.

4. மாதுளை ஜூஸ்

மாதுளையில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் (phytoestrogens) இருப்பதால் மாதவிடாய் வலிகளில் இருந்து விடுபட ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். மாதுளம்பழத்தில் உள்ள விதைகளில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் (Anti-oxidents) இருப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகளை குறைக்க பெரிதும் உதவும். இது உடலை குளுமை படுத்தவும் உதவும்.  அதனால் இதை விதையோடு சேர்த்து அறைத்து குடிப்பது வலிகளில்  இருந்து விடுபட உதவும்.

5. கேரட் ஜூஸ்

வெறும் கேரட்-ஐ சாப்பிடுவது அல்லது கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ரேத்த போக்கு சீராக இருக்கும் மற்றும் உடல் வலிகளும் குறைக்க பெரிதும் உதவும். அயன் மற்றும் பீட்டா கரோட்டின்கர்ரோட்டில் நிறைந்து இருப்பதால் ரத்தபோக்கை சீராக வைத்திருக்க உதவும். கேரட்-ஐ பச்சையாக சாப்பிடுவதன் மூலம் அதிக வழியை கட்டுப்படுத்த முடியும். கேரட் ஜூஸ்-ஐ தொடந்து குடித்துவருவதன் மூலம் PMS (Premenstrual syndrome) பிரச்சனைகளை குறைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

Share this post with your friends