Mnadu News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26,000 கன அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாம் நாளான இன்றும் காலை வினாடிக்கு 26,000 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதமும், வெள்ள நீர் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி வீதம் உபரிநீர் போக்கி வழியாகவும் திறக்கப்பட்டு உள்ளது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 23 ஆவது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.

Share this post with your friends