Mnadu News

ரூ.7,374 கோடி கடனை திருப்பிச் செலுத்திய அதானி.

அதானி குழுமத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சிக்குப் பின், ஒட்டுமொத்த ஊக்குவிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஏப்ரல் 2025 இல் முதிர்ச்சி காலம் இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே ரூ. 7,374 கோடி (902 மில்லியன் டாலர்) பங்கு ஆதரவு நிதியுதவியை நாங்கள் திரும்ப செலுத்தியிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம் என அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதோடு மட்டுமல்லாமல், 2023ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் அனைத்து பங்கு ஆதரவுடன் மீதமுள்ள கடன்களையும் முன்கூட்டியே செலுத்துவதற்கு அதானி குழுமம் உறுதியளித்துள்ளது.முதிர்வு காலத்துக்கு முன்பே, கடன் நிலுவைகளை திரும்ப செலுத்தி, சர்வதேச மற்றும் தேசிய முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுத்திருக்கும் நிதி நிறுவனங்களிடையே, நம்பிக்கையைப் பெறும் வகையில் அதானி குழுமம் மேற்படி, முன்கூட்டியே கடனை திரும்பச் செலுத்துவது இது மூன்றாவது நிகழ்வாகும்.

Share this post with your friends