லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் தமது அடுத்த படமான 68 படத்துக்கு தயாராகி வருகிறார். பல்வேறு எதிரபார்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் 68 படம் குறித்த பல அதிரடி அப்டேட்ஸ் வெளியாகி உள்ளன.
ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது என இவை யாவும் தெரிந்த கதைகள். ஆனால், தற்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன் படி ஒரு தந்தை மகன் மோதல் சம்பவத்தை மையப்படுத்தி ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.
இதில் யாருமே எதிர்பாராத நடிகர்கள் கூட்டணி அமைத்து நடிக்க உள்ளனர். அதன்படி, மாதவன், ஜெய், பிரபு தேவா என இவர்களின் பெயர்கள் கசிந்து வருகின்றன. அதே போல பிரியங்கா மோகன், ஜோதிகா பெயர்களும் இந்த லிஸ்ட்டில் உள்ளன. மேலும், மதன் கார்க்கி பாடல்களை எழுதி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, பரீ ப்ரொடக்ஷன் பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் விஜய் 68 துவங்கி, 2024 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு படத்தை கொண்டு வரவே படக்குழு திட்டமிட்டு உள்ளது. செப்டம்பர் இறுதியில் ஒவ்வொரு அப்டேட் யும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.