Mnadu News

ஹிமாசலில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 290 ஆடுகள் உயிரிழப்பு.

ஹிமாசலில் வழக்கமாக தொடங்குவதைக் காட்டிலும் முன்னதாகவே தென்மேற்கு பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஹிமாசலில் பெய்து வரும் கனமழையால் சம்பா மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 300 ஆடுகள் உயிரிழந்தன. அதோடு, ஒரு வீடு மற்றும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.அதே நேரம், நிலச்சரிவினால் குடிநீருடன் அசுத்த நீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் நீரினை நன்றாக காய்ச்சிப் பருக மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share this post with your friends