Mnadu News

ஹூண்டாயின் 2வது மின்னணு கார் அறிமுகம்: ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ. மைலேஜ்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த புதிய ரக கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்தவகையில் தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், அயோனிக் 5 இவி என்ற மின்னணு கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஹ_ண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
72.6 kWh திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 631 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காரின் விலை 44 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த காரின் விளம்பர தூதராக நடிகர் ஷாருக்கான் உள்ளார். அறிமுக விழாவிலும் அவர் பங்கேற்றார்.

Share this post with your friends