Mnadu News

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்-மாவட்ட ஆட்சியர்

புகழ்மிக்க காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்றைய முதல்நாளே அத்திவரதர் தரிசிக்க ஏராளமான பகதர்கள் தரிசித்தனர் .இந்நிலையில் அத்திவரதர் தரிசிக்க இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதுகிறது.மேலும் தரிசனம் செய்வதற்கான நுழைவு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் முதல் நாளான இன்று 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .அதோடு மட்டுமல்லாமல் ,இன்று ஒரே நாளில் 9 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends