Mnadu News

10 அமைச்சர்களின் இலாகா மாற்றம்.

தமிழகத்தில் 10 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் மெய்யநாதனின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதாக சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன்கள் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பெரியகருப்பனிடம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை ஐ.பெரியசாமிக்கும், பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமசந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், மதிவேந்தனுக்கு வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளது. மெய்யநாதன் சுற்றுலாத் துறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர் பாபுவுக்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தியாகராஜனுக்கு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.ராஜகருப்பணுக்கு கூடுதலாக கதர் மற்றும் கிராம தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends