கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் அதே இடத்தில் உயிரிழந்தார். முபீன் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா , முகமது அசாருதீன், கோவை ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அஃப்சர் கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, என்ஐஏ காவலில் எடுத்துள்ள 6 பேரையும் விசாரணை செய்வதற்காக இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கைதான 6 பேரையும் வரும்; 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவழகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
என்.ஐ.ஏ நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறு பேரையும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More