Mnadu News

10 சதவீத இடஒதுக்கீடு: வரும் 12 இல் அனைத்துக் கட்சி கூட்டம்.

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (இ.டபிள்யு.எஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையடுத்து, இன்று காலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி.யும் வழக்குரைஞருமான நெல்சன் உள்ளிட்டோருடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து, வரும் 12 ஆம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்; நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவைக் குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More