Mnadu News

10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்க அரசு தீவிரம்: பிரதமர் மோடி பேச்சு.

குஜராத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், பல்வேறு நிலைகளில் உள்ள வெவ்வேறு பணியிடங்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருதாகவும், குஜராத் பஞ்சாயத்து சேவை வாரியத்தில் இருந்து 5 ஆயிரம் பேருக்கும், குஜராத் துணை ஆய்வாளர் நியமன வாரியம் மற்றும் லோக்ரக்ஷக் நியமன வாரியத்தில் இருந்து 8 ஆயிரம் பேருக்கும் பணி நியமன கடிதங்கள் அளிக்கப்படுவதாகவும், துரித நடவடிக்கையை மேற்கொண்ட குஜராத் முதல் அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார் பிரதமர்.
குஜராத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம். ஓஜாஸ் போன்ற டிஜிட்டல் தளங்களையும், குரூப் 3 மற்றும் 4-ஆம் நிலை இடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை நீக்கப்பட்டிருப்பதை பாராட்டிய மோடி, “அனுபந்தம்” செல்பேசி செயலி மற்றும் வேலைவாய்ப்பு இணையதளம் முதலியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன. அதேபோல குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விரைவான பணி நியமன மாதிரி தேசிய அளவில் பாராட்டப்படுகிறது.
2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக முன்னேறும் இந்தியாவின் உறுதிபாட்டில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியவர், சமூகத்திற்கும், நாட்டிற்குமான தங்களது கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்யும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கும், அதோடு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல கதவுகள் திறக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More