2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது.10 மற்றும் 11-ஆம் வகுப்புக்கான முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு முடிவுகள் காலை 10 மணிக்கும், 12-ஆம் வகுப்பு முடிவுகள் பகல் 2 மணிக்கும் வெளியாகின்றன.அதிகாரபூர்வ இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.அதோடு, மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உபகரண கூட்டுத் தயாரிப்பு: இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ,...
Read More