Mnadu News

1,000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா 42 லட்சம் ரூபாய் என மதிப்பீடு செய்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு – 180, சேலம் -100, கோவை – 120, மதுரை -220, கும்பகோணம் – 250, நெல்லை – 130 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.

Share this post with your friends