Mnadu News

12 கிலோ எடை கொண்ட ‘பாகுபலி’ சமோசா: 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் இனிப்பகம் ஒன்றில், உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பிரத்யேக மசாலா கொண்டு தேர்ந்த சமையல் கலைஞரால் தயார் செய்யப்படும் மெகா சைஸ் சமோசா ‘பாகுபலி சமோசா’ என அழைக்கப்படுகிறது.இந்த சமோசா, சட்னியுடன் உணவுப் பிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த பாகுபலி சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிட்டு முடித்தால் 71 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக இனிப்பகத்தின் உரிமையாளர் {பம் கௌஷல் அறிவித்துள்ளார்.ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த சமோசாவை சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துள்ளாராம். நிச்சயம் இந்த சவாலில் யாரேனும் ஒரு வாடிக்கையாளர் வெற்றி பெறுவார் என தான் நம்புவதாக கௌஷல் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends