Mnadu News

13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்:குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உத்தரவு.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசனை, நாகாலாந்து மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூசன் ஹரிசந்தனை, சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உக்யே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.,பிகார் ஆளுநராக இருந்த பாகு சௌவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாசல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, பிகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், சிக்கிம் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, ஹிமாசல பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக செயல்பட்டு வந்த ரமேஷ் பயஸ் மகாரஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, லடாக் ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூரின் ராஜிநாமாக்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More