தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜோகன்னெஸ்பெர்க் நகரிலுள்ள க்ருகர் தேசிய வனவிலங்கு பூங்காவிலிருந்து 14 சிங்கள் தப்பித்துள்ளது . தப்பித்த அந்த சிங்கங்களை தேடும் பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய பூங்கா அருகிலுள்ள பாஸ்கர் பாஸ்பேட் சுரங்கத்திற்கு அருகில் சிங்கங்கள் சுற்றி திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சிங்கங்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறும் வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்