Mnadu News

15 ஏக்கரில் அமைகிறது புதுச்சேரி புதிய சட்டப்பேரவை கட்டிடம்: பேரவைத் தலைவர் செல்வம் தகவல்.

புதுச்சேரி மாநிலத்தின் புதிய சட்டப்பேரவை வளாகம் மத்திய அரசின் 440 கோடி ரூபாய் நிதியில் தலைமை செயலகத்துடன் இணைந்த அமைய உள்ளது. இந்த நிலையில்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம்,“புதிய சட்டப்பேரவை கட்டிடம் தட்டாஞ்சாவடி பகுதியில் 15 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்கான மாதிரி வரைபட இறுதி அறிக்கையானது வரும் 30-ஆம் தேதி அரசுக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய சட்டப்பேரவை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வளாகமாக அமையும். தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட மத்திய அரசிடம் ஏற்கெனவே 440 கோடி ரூபாய் வழங்க கோரப்பட்டுள்ளது. புதிய சட்டப்பேரவை வளாகத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்படும்.என்று கூறியுள்ளார்.

Share this post with your friends