நடராஜர், அம்மன், பார்வதி, நந்தி, புத்தர் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பழங்கால சிலைகளை தரகர் விற்கவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்து காவல் கண்காணிப்பாளர், சிலைகடத்தல் குற்றப்பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் முக்கிய சிலை சேகரிப்பாளர்களாக மாறு வேடமிட்டு தரகரை அணுவாகுவதற்கான திட்டத்தை வகுத்தனர்.
தரகர் அதிக வற்புறுத்தலுக்குப் பின், சிலைகளைக் காட்ட ஈரோடு மாவட்டத்திலிருந்து சென்னை வந்தார். கடந்த 18-ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் வந்தவுடன், அவரைப் பிடிக்க டிஎஸ்பி முத்துராஜ் மற்றும் அவரது குழுவினர் தயாரான நிலையில், தரகர் சுரேந்தரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சிலைகடத்தல் பிரிவு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி 15 சிலைகளைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடையது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சி சைலேந்திர பாபு மற்றும் ஜெயந்த் முரளி ஆகியோர் சிறப்புக் குழுவைப் பாராட்டி, சிறப்பாகப் பணியாற்றிய குழுவினருக்கு வெகுமதியும் அறிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More