ரேஷனில் கோதுமை வழங்க மாதம், 13 ஆயிரத்து, 485 டன் கோதுமை தேவை. இதை மத்திய அரசு வழங்கியது. தற்போது, அரிசி பிரிவில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா பிரிவுக்கு மட்டும் மாதம், 8 ஆயிரத்து 500 டன் கோதுமை வழங்கப்படுகிறது. இதனால், ஒரு கார்டுதாரர்களுக்கு, 3 கிலோவுக்கு குறைவாகவே கோதுமை வழங்கப்படுகிறது.எனவே,தமிழகத்திற்கு மாதம், 15 ஆயிரம் டன் கோதுமை வழங்குமாறு, மத்தியஅரசுக்கு, உணவு துறை சமீபத்தில் கடிதம் எழுதியது. இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.எனவே, மத்திய அரசின் முடிவை தெரிந்து கொள்ள, உணவு துறை அதிகாரிகள், சில தினங்களில் டெல்லி சென்று பேச்சு நடத்த உள்ளனர்.ஒரு வேளை,மத்திய அரசு கோதுமை வழங்க முன்வராதபட்சத்தில், அதனிடம் இருந்து அனுமதி பெற்று, தேசிய கூட்டுறவுஇணையம் போன்ற அமைப்புகள் வாயிலாக, வெளிச்சந்தையில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மற்ற கட்சிகளை விட வித்தியாசமானது பா.ஜ.க: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய...
Read More