Mnadu News

1635 ஊழல் வழக்குகள் விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியரான அண்ணாதுரை என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையிலுள்ளது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள் பலர் தொடர்ந்த வழக்குகளும் நிலுவையிலுள்ளன.
இந்நிலையில், நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, அவசியம் இல்லாமல் ஊழல் வழக்குகளை தள்ளி வைக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.
ஊழல் வழக்குகள் நீண்டகாலம் நிலுவையில் இருந்தால், ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிலுவையிலுள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Share this post with your friends