இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை கங்கனா ரணாவத். கதாநாயகர்களுக்கு இணையாக அவரது படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பாக பத்மஸ்ரீP விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதோடு, 2 தேசிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிட்டத்தக்கது..இந்நிலையில், தற்போது தனது புதிய படத்திற்காக மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சியில் களமிறங்கியுள்ளார். எம்ர்ஜென்சி படத்திற்காக உடல் எடை கூடியிருந்த கங்கனா தற்போது தீயாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 6 மணி நேரத்தில் 3 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமாக லைக்குகள் பெற்றுள்ளது.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More