‘இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ்’ சார்ந்த கொள்கை முடிவில் கூகுள் தரப்பில் மேற்கொண்டுள்ள மாற்றம் காரணமாக பயனர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து ரிவ்யூ செய்ய வேண்டும். அதை செய்யாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன்னர் இன்-ஆக்டிவாக இருக்கும் பயனர் கணக்குகளில் இருக்கும் டேட்டாவை மட்டுமே கூகுள் நீக்கி வந்தது. இப்போது கணக்கையே மொத்தமாக நீக்க உள்ளது.இதன் காரணமாக ஜிமெயில், டாக்குமெண்ட், டிரைவ், காலண்டர், யூடியூப் மற்றும் கூகுள் போட்டோ என பயனர்கள் ஒரே நேரத்தில் பல தளங்களின் தரவுகளை இழக்க நேரிடும். ‘ரிஸ்கை குறைக்கும் வகையில் இந்த கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதி முதல் 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கூகுள் கணக்குள் நீக்கப்படும்’ என கூகுள் வலைப்பூவில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More