பீகார் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் தண்டவாளம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு ரயில்வே காவலர்களை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் கீழ் பந்தவூல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து லோஹாத் என்ற சக்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது.இந்த சக்கரை ஆலை கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் இருந்ததால், ரயில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ. தொலைவிலான இந்த பாதை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனதால், கிராம மக்களின் புகாரை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை தொடர்ந்ததுஇந்த திருட்டில் தொடர்புடைய இரண்டு ரயில்வே காவலர்களை இடைநீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது. பொதுவாக ரயில்களில்தான் அவ்வப்போது திருட்டு சம்பவம் அரங்கேறும், ஆனால் ரயில் தண்டவாளமே திருடு போன சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More