சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 17, 18 ஆகிய இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.மே 17ல் தெற்கு அரபிக்கடலில் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம்...
Read More